ஒரு மனிதனுக்கு அவன் குடும்பம் மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்களின் ஒரேஒரு கடமை இக்கட்டான சுழலில் ஆறுதலான வார்த்தைகளை சொல்வதும் அரவணைப்பது மட்டுமே. புத்தகத்தில் இருந்து அறிவும், மீடியாவில் இருந்து செய்தியும், வலைத்தளத்திலோ என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் கிடைக்கும். இப்படி இருக்க குடும்பம் எனபது மட்டுமே அன்பை கொடுத்து ஆனந்தத்தை உருவாக்கும் இடமாக இருக்க முடியும். என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள் அவள் அண்ணனை பற்றி. அவன் நிறைய படிபபானாம். அவளிடம் எதாவது பேசுவது என்றால் அவனுக்கு தெரிந்த அறிவியல் கோட்பாடுகள் பற்றித்தான் பேசுவான். இவள் இதைபற்றி ஒருபுறம் பெருமையாக சொன்னாலும் மறுபுறமோ அவனின் அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது. குடும்ப நபர் ஓவருவரின் எதிர்பார்ப்பையும் ஒருத்தரால் நிறைவு செய்ய முடியாது. அதற்காக அவர்களை வெறுத்து விட்டால் அதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது. குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தேவை படுவது அன்பு ஆதரவு மற்றும் மனதுக்கு அமைதி. இதை திருப்தியாக தந்தால் எப்பேர்பட்ட குழந்தையும் படிப்பில் சிறந்தவராக முடியும். இது குழந்தைக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும். அதை விட்டு அட்வைஸ் பண்ணுவதும், அதை படி இதை படி என்று கஷ்ட்டம் செய்வதும் கம்பேர் பண்ணுவதும் ஒருவரின் மன அமைதியை கெடுக்குமே தவிர பெரிய மாற்றத்தை கொடுக்காது
இனிமையான வார்த்தைகளால் குடும்ப நபரை பாராட்டி, அவர்களுடைய நல்லதை எடுத்து சொல்லி மகிழ்வூட்டி , அவர்களோடும் குடும்பத்தார் அனைவரோடும் சந்தோசமாகவும் அமைதியாகவும் வாழ்வோம் . வெற்றிகளும் சாதனைகளும் தானே தேடி வரும்.
No comments:
Post a Comment