Friday 5 August 2011

நமக்குள் பார்ப்பதும், நம்மை நோக்கி பயணிப்பதும் மன அமைதியை அதிகபடுத்தும்

யாரவது உங்களை திட்டிவிட்டாலோ, மனம் நோகும்படி நடந்துவிட்டாலோ, உடனே உங்களின் மனம் வருத்தப்படுவதோடு மீண்டும் அவர்களை எதாவது செய்யவேண்டும் என யோசிக்க ஆரம்பித்துவிடும். அப்பொழுது மன அமைதி என்பதை தேடினாலும் உணர முடியாது. அம்மாதிரியான சூழல்களில் சிறிது நேரம் மனதை அமைதிபடுத்த முயலுங்கள். கண்டிப்பாக முடியும் உங்களால், பின்பு நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சு பயிற்சி செய்யும்போது அப்படியே அதில் கவனம் செலுத்தி உங்களுக்குள் பார்க்க முயற்சி செய்யுங்கள். நம்மை நாமே உள்நோக்கி பார்க்கும் போது ஒருவித அமைதியை உணர முடியும்.

அதற்குத்தான் சொல்லுவார்கள் prayer , தியானம், relaxation போன்றவற்றை செய்வது நல்லது என்று. இவை எல்லாம் நம்மை அமைதிபடுத்தும் செயல்கள். இதை நாம் செய்யும் போது நாம் நமக்குள் பயணம் செய்ய ஆரம்பிப்போம். இம்மாதிரி செய்யும் போது நம்மை பற்றிய தெளிவும் அறிவும் நமக்கு அதிகமாகும். இத்தெளிவு மன நிறைவோடு கூடிய அமைதியை கொடுக்கும். நமக்கு உள்ளே நாம் கவனிக்கும் பொழுது நம்முடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கற்றுகொள்ள ஆரம்பிப்போம். அதனால் தேவையில்லாத சிந்தனைகள் அகற்றப்பட்டு நமக்கு என்னதேவை, எதை நோக்கி செல்ல வேண்டும் எனபதில் ஒரு உணர்தல் ஏற்படும் . உங்களையே நீங்கள் கவனிப்பதால் வரும் அத்தெளிவு உங்களையே உங்களுக்கு பிடிக்கவும் மற்றவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தவும் உங்களை ஊக்குவிக்கும். இதல்லாம் ஒருசேர நடக்கும் போது வாழ்வில் ஒரு பிட்டிப்பும் சந்தோசமும் அதிகமாக மன அமைதி உங்களுக்கே சொந்தமாகும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

Monday 6 June 2011

சலனமில்லாத மனது அதில் இருக்கும் அமைதி

நாம் ஒவருவரும் ஒரு நாளில் அல்லது வாரத்தில் என்றாவது ஒரு தடவை ஒரு வித அமைதி நம் மனதில் இருப்பதை உணர்வோம். அந்த அமைதி க்கு என்று சில காரணங்கள் இருக்கும், அதை கண்டுபிடித்தால் நாம் என்றுமே மன அமைதி மற்றும் மன நிறைவுடன் இருப்பதற்கான வழியை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வியை கற்று கொடுப்பதில் ஆர்வம் உடையவர். அவர் சொல்வார், என் சந்தோசமும் மன அமைதியும் அவர்களுக்கு கற்றுகொடுக்கும் போது என்னால் உணரமுடிகிறது.

இப்படியாக நமக்கு எதை செய்தால் சந்தோசம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தல் முக்கியம்.

உங்களை உங்களுக்கு பிடிக்க வேண்டும், அப்பொழுது நம்மால் என்ன முடியுமோ அது நம்மை எவளவு சந்தோசம் படுத்துமோ என்று தெரிந்து அதில் ஈடுபட்டால் மன அமைதி யும் சந்தோசமும் நம்முடன் என்றுமே இருப்பதாய் உணரலாம்

Friday 14 January 2011

புதுமை படைப்பதும் மனஅமைதியும்

ஓவருவருக்கும் அவர்களுக்கு என்று புதுமை படைக்கும் ஆற்றல் உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்த பழகி இருக்கிறோமோ அதை பொறுத்து நம் வாழ்வில் சந்தோசமும் மனஅமைதியும் ஏற்படும். புதுமை படைப்பது அதாவது creativity என்பது ஆங்கிலத்தில், நம் பேச்சில் இருந்து, நாம் செய்யும் ஓவரு செயல்களிலும் நம்முடைய creative ஆற்றலை பயன்படுத்தி அங்கே ஒரு புது தன்மையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தும் பொழுது நமக்கு என்று ஒரு அங்கீகாரத்துடன் ஒருவித சந்தோசத்தையும் நாம் பெறமுடியும். . இப்படியாக ஓவரு நாளிலும், பல இடங்களில், அவரவருக்கே உரித்தான புதுமையான சிந்தனைகளை செயல்படுத்த ஆரம்பித்தால், ஒருவித தன்னம்பிக்கையுடன் கூடிய மனஅமைதியை உணர முடியம்.

புதுமையை படைப்பது என்பது ஒரு தனித்திறமை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஓவருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஆனால் புதுமை படைப்பது என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு திறமை, அதை நாம் கண்டுபிடித்து பயிற்சியின் மற்றும் பழக்கத்தின் அடிப்படையில் அதை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் வளர்த்து கொண்டபின் அது ஒரு தனித்திறமையாக கருதப்படிகிறது.

எடுத்துக்காட்டாக, எனது நண்பர் ஒருவர் அவருக்கு வரும் forward message யை, அப்படியே திருப்பி புதுமையாக சிலதை சேர்த்து அனுப்பியவருக்கே அனுப்புவார். இதுவும் கூட ஒருவித creativity தான். இப்படியாக நம் வாழ்வில், பல சந்தோசங்களை நாம் அனுபவிப்பதோடு, நம்முடன் சேர்ந்தோரையும், நம்முடைய புதுமை படைக்கும் திறமையினால், அவர்களை சந்தோசபடுத்தி ஒருவித மனஅமைதியை அவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.

பேச்சில், எழுத்தில், நடவடிக்கையில், செயல்களில், மற்றவர்களுடன் உறவை மேம்படுத்துவதில், நம் வாழ்க்கை முன்னேற்றத்தில், நம் சமூகத்தை வழிநடத்துவதில், என்று பல இடங்களில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி, பழையன இல்லாமல், புதுமையான கண்ணோட்டத்தில் உலகை பார்வையிட நமக்கே உரித்தான புதுமை படைக்கும் ஆற்றலை வளர்ப்போம், மனித வாழ்வில் புதுமை படைத்தவர்கள் தான் தனியாக அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை யாவரும் அறிவோம். அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, மனதில் இருக்கும் மற்ற கஷ்டத்தையும், கவலையையும் பின்னுக்கு தள்ளி, எப்போதும் மனஅமைதியை பெற்றிடுவோம்.