Friday, 24 December 2010

எழுத்துக்குள் புதைந்து இருக்கும் மன அமைதியும் ஆனந்தமும்

ஒரு மனிதனின் மன அமைதி இழப்பிற்கு பல காரணங்கள் இருக்கிறது. எடுத்துகாட்டாக குடும்ப பிரச்னை, பணபிரச்சனை, சுற்றி இருப்பவர்களால் வரும் போராட்டம் என மன குழப்பங்கள் அதிகம். இம்மாதிரியான சூழலில் இருந்து நாம் வெளியே வந்து இந்த அழகான உலகை அனுபவித்து சந்தோஷ படுவதற்கு நாம் எழுதும் பழக்கத்தை முறைபடுத்தி கொண்டால் நம் மனம் எப்போதுமே அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். அப்படி என்ன இருக்கிறது நாம் எழுதும் பொழுது என்று கேட்கிறீர்களா? இதோ பல ஆராய்சிகளின் முடிவுகள் இங்கே. ஒருவர் எழுதும் பொழுது அவரின் சிந்தனை திறன் அதிகமாகிறது பின்னர் சிந்திக்கும் பழக்கத்தையும் புதுமை படைக்கும் ஆற்றலையும் அவர் கற்று கொள்கிறார். புதுமை படைப்பது, புதுமையாய் ஒன்றை உருவாக்குவது என்பது எல்லாராலும் முடிந்து விடாது. மனதை சந்தோசமாகவும் அமைதியாகவும் வைத்து இருக்கும் சிலரால் மட்டுமே முடியும்.

எழுதும் பொழுது நமக்குள் இருக்கும் அறிவையும் திறமையையும் வெளிபடுத்துகிறோம், நமக்குள் இருப்பதை நம்மால் வெளிபடையாக பார்க்க முடிகிறது. நாம் யார் என்பதை நம்மால் அங்கே உணர முடிகிறது. இதனால் மனதில் ஒருவித ஆறுதல் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையில் எல்லாவற்றையும் மனதிலே வைத்து கொண்டு இருந்தால் அதனால் மனக்குழப்பமும், போராட்டமும் அதிகம் தான் ஆகுமே தவிர அமைதி இருக்காது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அவரால் வேறு ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயமும் கூடவே இருக்கும். ஆனால், அதை எழுத்து வடிவில் கொண்டு வந்தால் நம் பாரம் குறையும். மனதில் அமைதியும் பிறக்கும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தமிழ் வலைபதிவுகளுக்கு திரட்டிகள் உள்ளன. அவற்றில் உங்களை வலைபதிவை இணைப்பதன்மூலம் மேலும் அதிக வாசகர்களை அடையலாம். www.tamilmanam.net ; www.tamilveli.com ; www.thiratti.com

    கமெண்ட் பகுதியில் வேர்ட் வெரிபிகேஷன் ஆப்ஷனை நீக்கலாம்

    ReplyDelete