ஒவருவரின் மன அமைதிக்கு பின்பும் சில பல காரணங்கள் இருக்கிறது. நம்முடைய மன ஓட்டங்கள் மற்றும் எண்ணங்கள் தவிர்க்க முடியாதது. அந்த எண்ணங்கள் எதை பற்றியதாய் இருக்கிறதோ அதை பொறுத்து மன அமைதி அமைகிறது. சிலர் நல்ல புத்தகங்களை படித்து அதை பற்றிய விவாதங்களில் ஈடுபடுவார்கள். அப்பொழுது அவர்களை தேவை இல்லாத சிந்தனைகள் எவ்விதத்திலும் பாதிக்காது. வேறு சிலர் தங்கள் தொழிலை நேசிப்பார்கள். அதனுடன் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்கும் தேவை இல்லாத எண்ணங்களின் பாதிப்பு குறைவதர்க்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியாக நாம் ஏதோ ஒன்றில் ஈடுபட்டு இருப்போம் என்றால் தவறுதலான சிந்தனைகளும் எண்ணங்களும் நம்மை பாதிக்காது சிந்தனைகளும் எண்ணங்களும் ஒருநிலையில் செலுத்தப்படும். ஆதலால் எந்த வித பாதிப்புகளில் இருந்தும் நம் மனதை காத்து கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் நாம் ஒன்றில் ஈடுபட்டு இருக்கும்பொழுது.
மன அமைதிக்கு, எழுதுவது கூட மிக சிறந்த மருந்தாக அமைகிறது. நம் மன உணர்வுகளை வெளிபடுத்துவதன் மூலமாக நம் மனம் தெளிவடைகிறது. தெளிவடைவதுடன் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. கேன்சர் நோயாளிகளிடமும், மற்ற நோயாளிகளிடமும் நடத்திய ஆராய்சிகளில், எழுதுவதை பழக்க படுத்தி பின்பு பார்க்கையில் அவர்களிடம் அமைதியான மனநிலை காணப்பட்டது என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எழுதுவது என்பது நம் சிந்தனையை தூண்டுவது, நம்மை நாம் உணர்வது, நம் அறிவுத்திறமையை அதிகப்படுத்துவது, எழுத்தின் மூலம் நம்மை மற்றவருக்கு அடையாளப்படுத்துவது, சிந்தனைகளையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி நம் உயர்வுக்கு வழிவகுப்பது, புதிதாக ஒன்றை உருவாக்கும் திறமையை அதிகபடுத்துவது, குறிப்பாக மன நிம்மதியையும் மன அமைதியையும் எற்படுத்துவதுகிறது.
நல்ல செயல்களில் ஈடுபடுவது, நல்லதை நினைப்பது, நல்ல நண்பர்களிடமும் நல்ல மனிதர்களிடமும் தொடர்பை உருவாக்குவது, தேவையான நேரங்களில் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது போன்ற நல்ல பல காரியங்களில் ஈடுபடுவதும் மன அமைதிக்கான காரணங்களாக இருக்கும். கெட்ட நிகழ்வுகள் மற்றும் கெட்ட எண்ணங்களை மனதிற்குள் செல்ல விடாமல் பழக்க படுத்த வேண்டும். சந்தோசமான சூழல்களை அதிக படுத்த வேண்டும். நம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் நல்ல செயல்களை பற்றி பேசுவதும் அவர்களை பாராட்டுவதும் ஒரு நல்லவிதமான மனநிலையை உருவாக்கும்.
நம் மனதின் சக்தி எல்லையற்றது. அது அமைதியாகவும் வலிமையாகவும் இருக்கும் பட்சத்தில் சாதனைகளும் வெற்றிகளும் நம் கைவசமாகும். வாழும் ஒரு வாழ்க்கை சந்தோசமாகவும் சரித்திரம் படைப்பதர்க்காகவும் அமையட்டும்.
Mehar M.Sc., Ph.D., (Psychology)
Happiness Coach & Motivational Speaker
VISUAMIND - School for Happiness
8870209982
No comments:
Post a Comment