Friday, 24 December 2010

மன அமைதியும் நல்ல உறக்கமும்

நல்ல உறக்கம் ஆரோக்கியமான மன நிலையை ஏற்படுத்தி மன அமைதியை உருவாக்கும். தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மன ரீதியாக பாதிப்பு இருந்தாலும், உடல் ரீதியாக வலி போன்ற வேதனை இருந்தாலும், அல்லது ஏதோ ஒன்றை பற்றி அதிக சிந்தனை செய்து அது கவலை ஆக மாறினாலும் அது நிம்மதியான தூக்கத்தை கெடுப்பதோடு தூக்கத்தின் அளவையும் குறைக்கும். உடல் ரீதியான பாதிப்பு இருந்தால் நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் அவசியம். சரியான அளவிலும், நிம்மதியாகவும் இருக்கும் தூக்கம் மட்டுமே நம்மை ஓவரு நாளும் சுறுசுறுப்பாகவும், மன நிறைவோடும், ஒருவித மன அமைதியோடும் கொண்டு செல்லும். படுக்கை என்பது தூக்கத்திற்கு மட்டுமே தவிர உங்களது பிரச்சனைகளையும், மன போராட்டங்களையும் திரும்பி பார்க்கும் இடம் அல்ல. எதை நாம் தொடர்ந்து செய்கிறோமோ அது நமக்கு பழக்கமாகும். அதேபோல நமது பிரச்சனைகளை படுக்கை அறையில் நினைவு கூர்நதோமானால் படுக்கை அறையை பார்த்தவுடன் பிரச்சனை தான் நினைவுக்கு வருமே தவிர தூக்கம் வராது.

தூங்க செல்வதற்கு முன் பத்து நிமிடம் கடவுளை பிரார்த்தனை செய்யலாம், இப்படி நம்மை சுற்றி நல்ல மனிதர்களை கொடுத்ததற்காகவும், நல்ல குடும்பத்தை கொடுத்ததற்காகவும் மேலும் நமக்கு நடக்கும் அனைத்து நல்லதிர்க்காகவும் கடவுளிடம் நன்றி சொல்லலாம்.

மிகவும் பிடித்த பாட்டோ, இசையோ கேட்கலாம், இல்லை கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணலாம்.

படுக்கையில் அமர்ந்து தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒவறு பாகமும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்துவிடலாம்.

பிடித்த புத்தகங்களை படிப்பதும் மிக சிறந்தது.


இவ்வாறு செய்வதன் மூலம் மனமானது அமைதி நிலைக்கு செல்ல ஆரம்பிக்கும். பின்பு தூக்கம் தானாக வரும். இப்படி வரும் தூக்கமானது உங்களை ஆழ்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும். இதைதவிர அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி, யோகா, மற்றும் தியானத்தை சேர்ப்பதோடு நல்ல உணவுப்பழக்கத்தை நடைமுறை படுத்துவதும் தூக்கத்திற்கு இன்றியமையாதது. . இனி தூக்கம் இல்லை என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். நல்ல தூக்கமே ஆரோக்கியமான மனநிலைக்கு உகந்தது. ஆரோக்கியமான மனநிலை மனஅமைதிக்கு வழிகாட்டி வாழ்வில் பல சாதனை புரிய வழி செய்யும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

No comments:

Post a Comment