இனிமையான உணர்வுகள் என்பது நமக்கு பிடித்தமான நிகழ்வுகள் , சூழ்நிலைகள், விவாதங்கள், மற்றும் நாம் பெற்ற பரிசுகள், பாராட்டுகள், சாதனைகள் போன்றவற்றை நினைவு கூறும்போது மனதில் தோன்றும் ஒருவிதமான நல்ல உணர்வு . இதை படிக்கும் போது கூட நீங்களே கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த விசயங்களை நினைத்து பாருங்கள். உடனடியாக உங்கள் மனதில் ஒருவித சந்தோசம் ஏற்படும். மனது கஷ்டப்படும்படியான நேரங்களில் தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து மனதை நல்ல சிந்தனைகளுக்கு உட்படுத்தி மன மாற்றத்தை உணரலாம். ஆனால் இது முதலில் சிரமமாக இருக்கலாம், பழக்கபடுத்தினால் எந்த மாதிரியான மன அழுத்தத்தையும் வென்றுவிட முடியும். இனிமையான உணர்வுகளை அவ்வபோது மனதில் பரவவிட்டால் மனம் பாதிக்கும்படியான பிரச்சனைகள் கூட நம்மை ஒன்றும் செய்யாது தவிர்த்து விடலாம்.
சந்தோசம், இனிமை, மகிழ்ச்சி, அமைதி, அழகு போன்ற வார்த்தைகளை பார்க்கும்போதும் கேட்கும்போதுமே நமக்கு ஒருவித நல்ல உணர்வு ஏற்படுகிறது. இதற்கு எதிர்மறையான வார்த்தைகளை விட்டு இம்மாதிரியான வார்த்தைகளை அடிக்கடி நம் பேச்சுகளில் சேர்த்தோம் என்றால் நாம் மட்டும் அல்லாது நம்மை சுற்றி இருப்போரிடமும் இனிமையான உணர்வுகளை ஏற்படுத்தி அவர்களிடமும் சந்தோசத்தை பார்க்க முடியும். நோயில்லா வாழ்க்கையுக்கு மனநலத்தின் பங்கு இன்றியமையாதது. மன அமைதி பெறுவோம் இனிமையாய் வாழ்வோம்.
No comments:
Post a Comment