Friday, 24 December 2010

மன அமைதியும் சந்தோஸத்தயும் உருவாக்குவோம்

ஸர்ப் எக்ஸ்செல் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள். ரோசி மிஸ் ஏன் வரல. அவங்க நாய்குட்டி செத்து போயிடுச்சாம். அதை கேட்ட மாணவன் ரோசி மிஸ் வீட்டுக்கு வருவான். அவர் சோகமாக இருப்பதாய் பார்த்து எப்படியாவது அவரைசந்தோஷ படுத்த முயல்வான். நாய் போல நடித்து காட்டுவான். அவனுடைய வெண்மையான உடை கரை படியும். ஆனாலும் அவன் அதை பற்றியெல்லாம் கவலை படாமல் ரோசி மிஸ்சை சந்தோஷ படுத்துவதில் கவனமாய் இருப்பான். பார்க்கும் போதே எவளவு இனிமை. அனுபவித்தால் எப்படி இருக்கும்.

இப்படியாக நாம் ஒவருவரும் மற்றவருக்காக தான் வாழ்கிறோம். வாழ்வது ஒரு வாழ்கை. எப்படியும் சாக போகிறோம். தவறு என்றாலும் கூட கடிந்து கொள்வதில் எந்த வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. அன்பால் மட்டுமே மாற்றத்தை காண முடியும். முடிந்தவரை அன்பை கட்டுவோம். முடியாத போது அன்பை வேறு விதமாக காட்டுவோம். எந்த வித சுழலிலும் மற்றவர்களிடையே சந்தோசத்தை உருவாக்க முடியும் நீங்கள் நினைத்தால். உறுதி எடுப்போம் அமைதியை வாழ.

மன அமைதிக்கு குடும்பத்தின் பங்கு

ஒரு மனிதனுக்கு அவன் குடும்பம் மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்களின் ஒரேஒரு கடமை இக்கட்டான சுழலில் ஆறுதலான வார்த்தைகளை சொல்வதும் அரவணைப்பது மட்டுமே. புத்தகத்தில் இருந்து அறிவும், மீடியாவில் இருந்து செய்தியும், வலைத்தளத்திலோ என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் கிடைக்கும். இப்படி இருக்க குடும்பம் எனபது மட்டுமே அன்பை கொடுத்து ஆனந்தத்தை உருவாக்கும் இடமாக இருக்க முடியும். என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள் அவள் அண்ணனை பற்றி. அவன் நிறைய படிபபானாம். அவளிடம் எதாவது பேசுவது என்றால் அவனுக்கு தெரிந்த அறிவியல் கோட்பாடுகள் பற்றித்தான் பேசுவான். இவள் இதைபற்றி ஒருபுறம் பெருமையாக சொன்னாலும் மறுபுறமோ அவனின் அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது. குடும்ப நபர் ஓவருவரின் எதிர்பார்ப்பையும் ஒருத்தரால் நிறைவு செய்ய முடியாது. அதற்காக அவர்களை வெறுத்து விட்டால் அதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது. குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தேவை படுவது அன்பு ஆதரவு மற்றும் மனதுக்கு அமைதி. இதை திருப்தியாக தந்தால் எப்பேர்பட்ட குழந்தையும் படிப்பில் சிறந்தவராக முடியும். இது குழந்தைக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும். அதை விட்டு அட்வைஸ் பண்ணுவதும், அதை படி இதை படி என்று கஷ்ட்டம் செய்வதும் கம்பேர் பண்ணுவதும் ஒருவரின் மன அமைதியை கெடுக்குமே தவிர பெரிய மாற்றத்தை கொடுக்காது



இனிமையான வார்த்தைகளால் குடும்ப நபரை பாராட்டி, அவர்களுடைய நல்லதை எடுத்து சொல்லி மகிழ்வூட்டி , அவர்களோடும் குடும்பத்தார் அனைவரோடும் சந்தோசமாகவும் அமைதியாகவும் வாழ்வோம் . வெற்றிகளும் சாதனைகளும் தானே தேடி வரும்.

அமைதியாய் வாழ நல்லதை பார்ப்போம்

தவறு என்பது இயற்கை. அதை அனைவரும் அறிவோம். மனிதர்களுக்குள்ளும் பலவித குணங்கள் இருக்கிறது. பார்க்கும் கண்ணை பொறுத்து நல்லது கேட்டது என பிரிக்கலாம். உங்களால் முடியும் என்ற புத்தகத்தில் ஷிவ் கேரா சொல்கிறார், மண்ணுக்குள் இருக்கும் தங்கத்தை தோண்டும் பொழுது சிறிய துளிகளாய் தங்கம் தெரியுமாம். நிறைய மண்ணில் இருக்கும் அந்த சிறு தங்கம் மட்டுமே கண்ணில் படும் பொழுது மனிதனுக்குள் இருக்கும் பல விதமான நடத்தைகளில் இருந்து நல்லதை மட்டும் எடுக்க ஆரம்பித்தால் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

சிலரின் குணநலன்கள் சிலருக்கு பிடிக்கலாம். ஆனால் அதை அவரிடத்தில் நேரிடையை சொல்வது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம் . அந்த மாதிரியான சுழலில் அவரின் அந்த நல்ல குணங்களை பற்றி அவருக்கு தெரிந்த நபர்களிடம் பெருமையாக சொல்லலாம். இது எப்படியும் சம்மந்த்தப்பட்ட நபரை போய் சேரும். அவருக்கு ஏற்படும் அந்த சந்தோசம் உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். இதனால் மனதிற்கு அமைதி ஏற்படும். அமைதி மட்டும் இருந்தால் போதும் வாழ்கையில் எதையும் சாதிக்கலாம் .

மன அமைதியின் முழு அர்த்தம்

அமைதி என்பது ஒரு நிசப்தம் என்றும் சொல்லலாம். மனதிற்குள் அமைதி என்றால் எந்த ஒரு கடுமையான சுழலிலும் மனதினுள் உணரப்படும் ஒருவிதமான அமைதி. எத்தனை பேருக்கு அந்த அமைதி கிடைத்துவிடும். இடம் அமைதியாக இருந்தாலும் மனதிற்குள் நடக்கும் போராட்டம் உணர்பவருக்கு மட்டுமே வெளிச்சம். மன அமைதி இருப்பவர்கள் எதற்கும் அவசர படாமல் பொறுமையுடன் வாழ்கையை நோக்கி செல்வார்கள். பலவித கோணத்தில் பார்க்கும் திறமை படைத்தவர்கள். அமைதியாய் இருந்தோம் என்றால் எதையும் ஒரு கோணத்தில் பார்த்து அவசர முடிவு எடுக்காமல் பொறுத்தே முடிவு எடுக்கும் ஒருவித உயர்ந்த நிலைக்கு உட்பட்டுவிடுவோம். மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது மற்றவர்களின் நல்லதை பற்றி பேசுவதும், அவரை பாராட்டுவதும், அவரிடம் மற்றும் அனைவரிடமும் அன்பு செலுத்துவதும் மிக முக்கியமானவைகள். நாம் அனைவரும் அமைதியாகவும் அன்புடனும் வாழ்கிறோம் என்பதை நான் அறிவேன். பின் எதற்காக இதை எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்களா எழுதுவதன் மூலமாக நான் இதை சரியாக செய்கிறேனா என்று அறிந்து கொள்ளத்தான்.

மன அமைதிக்கு நல்ல விதமான கற்பனை

நம்முடைய மூளைக்கு உண்மையையும் கற்பனையையும் பிரித்து பார்க்க தெரியாது. இரண்டையும் ஒன்றாகத்தான் எடுத்துக்கொள்ளும். அதாவது நம்மை யாராவது உண்மையாகவே பாராட்டினாலோ அல்லது புகழ்ந்தாலோ நாம் சந்தோஷ படுவோம். அதுபோல் நாம் கற்பனை செய்தாலும் சந்தோசம் படுவோம். அதனால் நல்ல விதமாகவே கற்பனை செய்தால் நம் மூளையானது அதை நோக்கி சென்று நம் நினைத்ததை அடைய வைக்கும். நீங்கள் நல்ல திறமைசாலியாக பலர் முன் பரிசு வாங்க வேண்டுமென்றோ அல்லது படிக்கும் மாணவன் படிப்பில் சிறந்து வர வேண்டும் என்றோ அல்லது நம் உறவினர்கள் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றோ உங்களின் தேவை கேற்ப கற்பனை செய்தால் அது மட்டுமே நடக்குமே தவிர வேறு எதுவும் நடக்காது. அதேபோல் தவறானதை நினைத்தோம் என்றால் அதுவும் நடக்கும். ஏனென்றால் நாம் நினைப்பதை மூளை அப்படியே ஏற்று அதற்க்கு தகுந்தபடி நம்மை வூக்குவிக்கிறது. அப்துல் கலாம் அவர்கள் அதனால் தான் கனவு காணுங்கள் என்று அடிக்கடி இளைநர்களிடம் சொல்கிறார். அது நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மட்டும் அல்ல நம் மன அமைதிக்கும் சந்தோசத்திற்கும் நிச்சயமாக உதவுகிறது. கேளிக்கை நிகழ்வுகளையும், இனிமையான ஜோக்ஸ்களையும் நாமே புதிதாக யோசித்து பார்த்தோம் என்றால் நம் மனதில் ஒருவித அமைதியை உணரலாம். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

மன அமைதியும் நல்ல உறக்கமும்

நல்ல உறக்கம் ஆரோக்கியமான மன நிலையை ஏற்படுத்தி மன அமைதியை உருவாக்கும். தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மன ரீதியாக பாதிப்பு இருந்தாலும், உடல் ரீதியாக வலி போன்ற வேதனை இருந்தாலும், அல்லது ஏதோ ஒன்றை பற்றி அதிக சிந்தனை செய்து அது கவலை ஆக மாறினாலும் அது நிம்மதியான தூக்கத்தை கெடுப்பதோடு தூக்கத்தின் அளவையும் குறைக்கும். உடல் ரீதியான பாதிப்பு இருந்தால் நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் அவசியம். சரியான அளவிலும், நிம்மதியாகவும் இருக்கும் தூக்கம் மட்டுமே நம்மை ஓவரு நாளும் சுறுசுறுப்பாகவும், மன நிறைவோடும், ஒருவித மன அமைதியோடும் கொண்டு செல்லும். படுக்கை என்பது தூக்கத்திற்கு மட்டுமே தவிர உங்களது பிரச்சனைகளையும், மன போராட்டங்களையும் திரும்பி பார்க்கும் இடம் அல்ல. எதை நாம் தொடர்ந்து செய்கிறோமோ அது நமக்கு பழக்கமாகும். அதேபோல நமது பிரச்சனைகளை படுக்கை அறையில் நினைவு கூர்நதோமானால் படுக்கை அறையை பார்த்தவுடன் பிரச்சனை தான் நினைவுக்கு வருமே தவிர தூக்கம் வராது.

தூங்க செல்வதற்கு முன் பத்து நிமிடம் கடவுளை பிரார்த்தனை செய்யலாம், இப்படி நம்மை சுற்றி நல்ல மனிதர்களை கொடுத்ததற்காகவும், நல்ல குடும்பத்தை கொடுத்ததற்காகவும் மேலும் நமக்கு நடக்கும் அனைத்து நல்லதிர்க்காகவும் கடவுளிடம் நன்றி சொல்லலாம்.

மிகவும் பிடித்த பாட்டோ, இசையோ கேட்கலாம், இல்லை கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணலாம்.

படுக்கையில் அமர்ந்து தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒவறு பாகமும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்துவிடலாம்.

பிடித்த புத்தகங்களை படிப்பதும் மிக சிறந்தது.


இவ்வாறு செய்வதன் மூலம் மனமானது அமைதி நிலைக்கு செல்ல ஆரம்பிக்கும். பின்பு தூக்கம் தானாக வரும். இப்படி வரும் தூக்கமானது உங்களை ஆழ்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும். இதைதவிர அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி, யோகா, மற்றும் தியானத்தை சேர்ப்பதோடு நல்ல உணவுப்பழக்கத்தை நடைமுறை படுத்துவதும் தூக்கத்திற்கு இன்றியமையாதது. . இனி தூக்கம் இல்லை என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். நல்ல தூக்கமே ஆரோக்கியமான மனநிலைக்கு உகந்தது. ஆரோக்கியமான மனநிலை மனஅமைதிக்கு வழிகாட்டி வாழ்வில் பல சாதனை புரிய வழி செய்யும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

மன அமைதிக்கான காரணங்கள்

ஒவருவரின் மன அமைதிக்கு பின்பும் சில பல காரணங்கள் இருக்கிறது. நம்முடைய மன ஓட்டங்கள் மற்றும் எண்ணங்கள் தவிர்க்க முடியாதது. அந்த எண்ணங்கள் எதை பற்றியதாய் இருக்கிறதோ அதை பொறுத்து மன அமைதி அமைகிறது. சிலர் நல்ல புத்தகங்களை படித்து அதை பற்றிய விவாதங்களில் ஈடுபடுவார்கள். அப்பொழுது அவர்களை தேவை இல்லாத சிந்தனைகள் எவ்விதத்திலும் பாதிக்காது. வேறு சிலர் தங்கள் தொழிலை நேசிப்பார்கள். அதனுடன் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்கும் தேவை இல்லாத எண்ணங்களின் பாதிப்பு குறைவதர்க்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியாக நாம் ஏதோ ஒன்றில் ஈடுபட்டு இருப்போம் என்றால் தவறுதலான சிந்தனைகளும் எண்ணங்களும் நம்மை பாதிக்காது சிந்தனைகளும் எண்ணங்களும் ஒருநிலையில் செலுத்தப்படும். ஆதலால் எந்த வித பாதிப்புகளில் இருந்தும் நம் மனதை காத்து கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் நாம் ஒன்றில் ஈடுபட்டு இருக்கும்பொழுது.

மன அமைதிக்கு, எழுதுவது கூட மிக சிறந்த மருந்தாக அமைகிறது. நம் மன உணர்வுகளை வெளிபடுத்துவதன் மூலமாக நம் மனம் தெளிவடைகிறது. தெளிவடைவதுடன் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. கேன்சர் நோயாளிகளிடமும், மற்ற நோயாளிகளிடமும் நடத்திய ஆராய்சிகளில், எழுதுவதை பழக்க படுத்தி பின்பு பார்க்கையில் அவர்களிடம் அமைதியான மனநிலை காணப்பட்டது என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எழுதுவது என்பது நம் சிந்தனையை தூண்டுவது, நம்மை நாம் உணர்வது, நம் அறிவுத்திறமையை அதிகப்படுத்துவது, எழுத்தின் மூலம் நம்மை மற்றவருக்கு அடையாளப்படுத்துவது, சிந்தனைகளையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி நம் உயர்வுக்கு வழிவகுப்பது, புதிதாக ஒன்றை உருவாக்கும் திறமையை அதிகபடுத்துவது, குறிப்பாக மன நிம்மதியையும் மன அமைதியையும் எற்படுத்துவதுகிறது.

நல்ல செயல்களில் ஈடுபடுவது, நல்லதை நினைப்பது, நல்ல நண்பர்களிடமும் நல்ல மனிதர்களிடமும் தொடர்பை உருவாக்குவது, தேவையான நேரங்களில் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது போன்ற நல்ல பல காரியங்களில் ஈடுபடுவதும் மன அமைதிக்கான காரணங்களாக இருக்கும். கெட்ட நிகழ்வுகள் மற்றும் கெட்ட எண்ணங்களை மனதிற்குள் செல்ல விடாமல் பழக்க படுத்த வேண்டும். சந்தோசமான சூழல்களை அதிக படுத்த வேண்டும். நம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் நல்ல செயல்களை பற்றி பேசுவதும் அவர்களை பாராட்டுவதும் ஒரு நல்லவிதமான மனநிலையை உருவாக்கும்.

நம் மனதின் சக்தி எல்லையற்றது. அது அமைதியாகவும் வலிமையாகவும் இருக்கும் பட்சத்தில் சாதனைகளும் வெற்றிகளும் நம் கைவசமாகும். வாழும் ஒரு வாழ்க்கை சந்தோசமாகவும் சரித்திரம் படைப்பதர்க்காகவும் அமையட்டும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

இனிமையான உணர்வுகளால் ஏற்படும் மன அமைதியும் சந்தோசமும்

இனிமையான உணர்வுகள் என்பது நமக்கு பிடித்தமான நிகழ்வுகள் , சூழ்நிலைகள், விவாதங்கள், மற்றும் நாம் பெற்ற பரிசுகள், பாராட்டுகள், சாதனைகள் போன்றவற்றை நினைவு கூறும்போது மனதில் தோன்றும் ஒருவிதமான நல்ல உணர்வு . இதை படிக்கும் போது கூட நீங்களே கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த விசயங்களை நினைத்து பாருங்கள். உடனடியாக உங்கள் மனதில் ஒருவித சந்தோசம் ஏற்படும். மனது கஷ்டப்படும்படியான நேரங்களில் தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து மனதை நல்ல சிந்தனைகளுக்கு உட்படுத்தி மன மாற்றத்தை உணரலாம். ஆனால் இது முதலில் சிரமமாக இருக்கலாம், பழக்கபடுத்தினால் எந்த மாதிரியான மன அழுத்தத்தையும் வென்றுவிட முடியும். இனிமையான உணர்வுகளை அவ்வபோது மனதில் பரவவிட்டால் மனம் பாதிக்கும்படியான பிரச்சனைகள் கூட நம்மை ஒன்றும் செய்யாது தவிர்த்து விடலாம்.

சந்தோசம், இனிமை, மகிழ்ச்சி, அமைதி, அழகு போன்ற வார்த்தைகளை பார்க்கும்போதும் கேட்கும்போதுமே நமக்கு ஒருவித நல்ல உணர்வு ஏற்படுகிறது. இதற்கு எதிர்மறையான வார்த்தைகளை விட்டு இம்மாதிரியான வார்த்தைகளை அடிக்கடி நம் பேச்சுகளில் சேர்த்தோம் என்றால் நாம் மட்டும் அல்லாது நம்மை சுற்றி இருப்போரிடமும் இனிமையான உணர்வுகளை ஏற்படுத்தி அவர்களிடமும் சந்தோசத்தை பார்க்க முடியும். நோயில்லா வாழ்க்கையுக்கு மனநலத்தின் பங்கு இன்றியமையாதது. மன அமைதி பெறுவோம் இனிமையாய் வாழ்வோம்.

இனிமையான உணர்வுகளால் ஏற்படும் மன அமைதியும் சந்தோசமும்

இனிமையான உணர்வுகள் என்பது நமக்கு பிடித்தமான நிகழ்வுகள் , சூழ்நிலைகள், விவாதங்கள், மற்றும் நாம் பெற்ற பரிசுகள், பாராட்டுகள், சாதனைகள் போன்றவற்றை நினைவு கூறும்போது மனதில் தோன்றும் ஒருவிதமான நல்ல உணர்வு . இதை படிக்கும் போது கூட நீங்களே கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த விசயங்களை நினைத்து பாருங்கள். உடனடியாக உங்கள் மனதில் ஒருவித சந்தோசம் ஏற்படும். மனது கஷ்டப்படும்படியான நேரங்களில் தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து மனதை நல்ல சிந்தனைகளுக்கு உட்படுத்தி மன மாற்றத்தை உணரலாம். ஆனால் இது முதலில் சிரமமாக இருக்கலாம், பழக்கபடுத்தினால் எந்த மாதிரியான மன அழுத்தத்தையும் வென்றுவிட முடியும். இனிமையான உணர்வுகளை அவ்வபோது மனதில் பரவவிட்டால் மனம் பாதிக்கும்படியான பிரச்சனைகள் கூட நம்மை ஒன்றும் செய்யாது தவிர்த்து விடலாம்.

சந்தோசம், இனிமை, மகிழ்ச்சி, அமைதி, அழகு போன்ற வார்த்தைகளை பார்க்கும்போதும் கேட்கும்போதுமே நமக்கு ஒருவித நல்ல உணர்வு ஏற்படுகிறது. இதற்கு எதிர்மறையான வார்த்தைகளை விட்டு இம்மாதிரியான வார்த்தைகளை அடிக்கடி நம் பேச்சுகளில் சேர்த்தோம் என்றால் நாம் மட்டும் அல்லாது நம்மை சுற்றி இருப்போரிடமும் இனிமையான உணர்வுகளை ஏற்படுத்தி அவர்களிடமும் சந்தோசத்தை பார்க்க முடியும். நோயில்லா வாழ்க்கையுக்கு மனநலத்தின் பங்கு இன்றியமையாதது. மன அமைதி பெறுவோம் இனிமையாய் வாழ்வோம் Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982

எழுத்துக்குள் புதைந்து இருக்கும் மன அமைதியும் ஆனந்தமும்

ஒரு மனிதனின் மன அமைதி இழப்பிற்கு பல காரணங்கள் இருக்கிறது. எடுத்துகாட்டாக குடும்ப பிரச்னை, பணபிரச்சனை, சுற்றி இருப்பவர்களால் வரும் போராட்டம் என மன குழப்பங்கள் அதிகம். இம்மாதிரியான சூழலில் இருந்து நாம் வெளியே வந்து இந்த அழகான உலகை அனுபவித்து சந்தோஷ படுவதற்கு நாம் எழுதும் பழக்கத்தை முறைபடுத்தி கொண்டால் நம் மனம் எப்போதுமே அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். அப்படி என்ன இருக்கிறது நாம் எழுதும் பொழுது என்று கேட்கிறீர்களா? இதோ பல ஆராய்சிகளின் முடிவுகள் இங்கே. ஒருவர் எழுதும் பொழுது அவரின் சிந்தனை திறன் அதிகமாகிறது பின்னர் சிந்திக்கும் பழக்கத்தையும் புதுமை படைக்கும் ஆற்றலையும் அவர் கற்று கொள்கிறார். புதுமை படைப்பது, புதுமையாய் ஒன்றை உருவாக்குவது என்பது எல்லாராலும் முடிந்து விடாது. மனதை சந்தோசமாகவும் அமைதியாகவும் வைத்து இருக்கும் சிலரால் மட்டுமே முடியும்.

எழுதும் பொழுது நமக்குள் இருக்கும் அறிவையும் திறமையையும் வெளிபடுத்துகிறோம், நமக்குள் இருப்பதை நம்மால் வெளிபடையாக பார்க்க முடிகிறது. நாம் யார் என்பதை நம்மால் அங்கே உணர முடிகிறது. இதனால் மனதில் ஒருவித ஆறுதல் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையில் எல்லாவற்றையும் மனதிலே வைத்து கொண்டு இருந்தால் அதனால் மனக்குழப்பமும், போராட்டமும் அதிகம் தான் ஆகுமே தவிர அமைதி இருக்காது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அவரால் வேறு ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயமும் கூடவே இருக்கும். ஆனால், அதை எழுத்து வடிவில் கொண்டு வந்தால் நம் பாரம் குறையும். மனதில் அமைதியும் பிறக்கும். Mehar M.Sc., Ph.D., (Psychology) Happiness Coach & Motivational Speaker VISUAMIND - School for Happiness 8870209982