யாரவது உங்களை திட்டிவிட்டாலோ, மனம் நோகும்படி நடந்துவிட்டாலோ, உடனே உங்களின் மனம் வருத்தப்படுவதோடு மீண்டும் அவர்களை எதாவது செய்யவேண்டும் என யோசிக்க ஆரம்பித்துவிடும். அப்பொழுது மன அமைதி என்பதை தேடினாலும் உணர முடியாது. அம்மாதிரியான சூழல்களில் சிறிது நேரம் மனதை அமைதிபடுத்த முயலுங்கள். கண்டிப்பாக முடியும் உங்களால், பின்பு நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சு பயிற்சி செய்யும்போது அப்படியே அதில் கவனம் செலுத்தி உங்களுக்குள் பார்க்க முயற்சி செய்யுங்கள். நம்மை நாமே உள்நோக்கி பார்க்கும் போது ஒருவித அமைதியை உணர முடியும்.
அதற்குத்தான் சொல்லுவார்கள் prayer , தியானம், relaxation போன்றவற்றை செய்வது நல்லது என்று. இவை எல்லாம் நம்மை அமைதிபடுத்தும் செயல்கள். இதை நாம் செய்யும் போது நாம் நமக்குள் பயணம் செய்ய ஆரம்பிப்போம். இம்மாதிரி செய்யும் போது நம்மை பற்றிய தெளிவும் அறிவும் நமக்கு அதிகமாகும். இத்தெளிவு மன நிறைவோடு கூடிய அமைதியை கொடுக்கும். நமக்கு உள்ளே நாம் கவனிக்கும் பொழுது நம்முடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கற்றுகொள்ள ஆரம்பிப்போம். அதனால் தேவையில்லாத சிந்தனைகள் அகற்றப்பட்டு நமக்கு என்னதேவை, எதை நோக்கி செல்ல வேண்டும் எனபதில் ஒரு உணர்தல் ஏற்படும் . உங்களையே நீங்கள் கவனிப்பதால் வரும் அத்தெளிவு உங்களையே உங்களுக்கு பிடிக்கவும் மற்றவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தவும் உங்களை ஊக்குவிக்கும். இதல்லாம் ஒருசேர நடக்கும் போது வாழ்வில் ஒரு பிட்டிப்பும் சந்தோசமும் அதிகமாக மன அமைதி உங்களுக்கே சொந்தமாகும்.
Mehar M.Sc., Ph.D., (Psychology)
Happiness Coach & Motivational Speaker
VISUAMIND - School for Happiness
8870209982
No comments:
Post a Comment