Monday, 19 February 2018
குழந்தைகளிடம் மன அமைதி ஏற்பட பெற்றோர்களின் பங்கு
நாம் அனைவருக்கும் நம் குழந்தைகளை பற்றி பெரிய கனவுகள் உண்டு. அந்த கனவுகள் நிறைவேறும் என்று எந்த தருணத்தில் நீங்கள் நம்புகிறீர்களோ அந்த நேரத்தில் இருந்து நீங்கள் நினைத்தது நடக்க ஆரம்பிக்கிறது. குழந்தைகள் மன அமைதியுடனும், மகிழ்வுடனும் இருக்கிறார்கள் என்றால் எதுவும் சாத்தியம். குழந்தைகளை எப்படி மன அமைதியுடனும் மகிழ்வுடனும் வைத்து கொள்ளலாம் யென்றால், அவர்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யும் செயல்களை பற்றி பாராட்டி பேசுவதும் அவர்களை பெருமை படுத்துவதும், குழந்தைகளை மகிழ்வுடன் வைத்து கொள்ளும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் எவ்வளவுக்கு எவ்வளவு குழந்தைகள் சிரிக்கிறார்களோ அவ்வளவுக்கு மகிழ்ச்சியும் மன அமைதியும் அவர்களிடம் ஏற்படும். குழந்தைகள் உங்களுக்கு பிடிக்காத செயல்களை செய்துவிட்டால் அதை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் மாற்றி விட வேண்டும். அப்பொழுது அவர்களிடம் நல்லாவிதமான உடல் மாற்றம் ஏற்படும். இவை யெல்லாம் குழந்தைகளிடம் அவர்கள் செய்யும் அனைத்தும் சரியே யென்ற எண்ணத்தை அதிகபடுத்தும். நாம் செய்வது சரி யென்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே சுய மதிப்புடனும், தன்னம்பிக்கையுடனும், மகிழ்வுடனும், வெற்றிகளுடனும் இருப்பார்கள் என்று மன நல ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
Dr. Mehar
Happiness Coach & Motivational Speaker
VISUAMIND - School for Happiness
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment