Friday, 14 January 2011

புதுமை படைப்பதும் மனஅமைதியும்

ஓவருவருக்கும் அவர்களுக்கு என்று புதுமை படைக்கும் ஆற்றல் உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்த பழகி இருக்கிறோமோ அதை பொறுத்து நம் வாழ்வில் சந்தோசமும் மனஅமைதியும் ஏற்படும். புதுமை படைப்பது அதாவது creativity என்பது ஆங்கிலத்தில், நம் பேச்சில் இருந்து, நாம் செய்யும் ஓவரு செயல்களிலும் நம்முடைய creative ஆற்றலை பயன்படுத்தி அங்கே ஒரு புது தன்மையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தும் பொழுது நமக்கு என்று ஒரு அங்கீகாரத்துடன் ஒருவித சந்தோசத்தையும் நாம் பெறமுடியும். . இப்படியாக ஓவரு நாளிலும், பல இடங்களில், அவரவருக்கே உரித்தான புதுமையான சிந்தனைகளை செயல்படுத்த ஆரம்பித்தால், ஒருவித தன்னம்பிக்கையுடன் கூடிய மனஅமைதியை உணர முடியம்.

புதுமையை படைப்பது என்பது ஒரு தனித்திறமை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஓவருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஆனால் புதுமை படைப்பது என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு திறமை, அதை நாம் கண்டுபிடித்து பயிற்சியின் மற்றும் பழக்கத்தின் அடிப்படையில் அதை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் வளர்த்து கொண்டபின் அது ஒரு தனித்திறமையாக கருதப்படிகிறது.

எடுத்துக்காட்டாக, எனது நண்பர் ஒருவர் அவருக்கு வரும் forward message யை, அப்படியே திருப்பி புதுமையாக சிலதை சேர்த்து அனுப்பியவருக்கே அனுப்புவார். இதுவும் கூட ஒருவித creativity தான். இப்படியாக நம் வாழ்வில், பல சந்தோசங்களை நாம் அனுபவிப்பதோடு, நம்முடன் சேர்ந்தோரையும், நம்முடைய புதுமை படைக்கும் திறமையினால், அவர்களை சந்தோசபடுத்தி ஒருவித மனஅமைதியை அவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.

பேச்சில், எழுத்தில், நடவடிக்கையில், செயல்களில், மற்றவர்களுடன் உறவை மேம்படுத்துவதில், நம் வாழ்க்கை முன்னேற்றத்தில், நம் சமூகத்தை வழிநடத்துவதில், என்று பல இடங்களில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி, பழையன இல்லாமல், புதுமையான கண்ணோட்டத்தில் உலகை பார்வையிட நமக்கே உரித்தான புதுமை படைக்கும் ஆற்றலை வளர்ப்போம், மனித வாழ்வில் புதுமை படைத்தவர்கள் தான் தனியாக அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை யாவரும் அறிவோம். அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, மனதில் இருக்கும் மற்ற கஷ்டத்தையும், கவலையையும் பின்னுக்கு தள்ளி, எப்போதும் மனஅமைதியை பெற்றிடுவோம்.